2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் E பிரிவில் ஈக்வடார் மற்றும் குராசோ அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஆட்டம் 0-0 என்ற  கணக்கில் சமனில்  முடிந்தது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பலமான ஈக்வடார் அணி ஆதிக்கம் செலுத்தியது. பந்தை அதிக நேரம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த அணி வீரர்கள், குராசோ கோல் போஸ்ட்டை நோக்கி பலமுறை தாக்குதல் நடத்தினர்.

ஈக்வடார் அணியின் உலகத்தரம் வாய்ந்த ஃபார்வேர்டு வீரர்களை கோல் அடிக்க விடாமல் குராசோ அணியின் டிஃபெண்டர்களும், கோல்கீப்பரும் மிக அரணாக நின்று தடுத்தனர். கடைசி நிமிடம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இரு கோல்கீப்பர்களும், குறிப்பாக குராசோவின் எலாய் ரூம், அதிக அளவில் செயல்பட வேண்டியிருந்தது. அவர் 15 முறை பந்தைத் தடுத்தார், இது 2014-ல் முன்னாள் அமெரிக்க கோல்கீப்பர் டிம் ஹோவர்ட் படைத்திருந்த சாதனையை விட ஒன்று குறைவாகும்.

முழு நேர ஆட்டமுடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால், போட்டி சமனில் முடிந்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் குரூப் இ பிரிவில் அடுத்த சுற்றுக்கான போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version