உளவுத்துறை டிஜிபியில் இருந்து எஸ்பி வரை கூண்டோடு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நேற்று உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க்கை நியமித்து முதல் உத்தரவை பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து இன்று உளவுத்துறையில் டிஜிபி முதல் எஸ்பிக்கள் வரை கூண்டோடடு மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. வேலூர் சரக டிஐஜியாக இருந்த பாதுகாப்பு பிரிவு டிஐஜிஜாக மாற்றம்.

2. சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த கல்யாண் மாநிலத்தின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் டிஐஜியாக மாற்றம்.

3. நெல்லை சரக டிஐஜியாக இருந்த சரவணன் உளவுத்துறை டிஐஜியாக மாற்றம்.

4. திருவாரூர் மாவட்ட காவல் எஸ்பியாக இருந்த கராட் கருண் உத்தவராவ் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக மாற்றம்.

5. தென்காசி காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த மயிவாகனன் உளவுத்துறை எஸ்பி (1) யாக மாற்றம்.

6. தூத்துக்குடி காவல் மாவட்ட எஸ்பியாக இருந்த மதன் உளவுத்துறை எஸ்பி (1) யாக மாற்றம்.

7. கியூ பிரிவு எஸ்பியாக இருந்த சண்முகம் உளவுத்துறை எஸ்பி (2) யாக மாற்றம்.

8. சிபிசிஐடி எஸ்பியாக இருந்த மாதவன் உளவுத்துறை எஸ்பி (2) யாக மாற்றம்.

9. தமிழக காவல்துறை உதவி ஐஜியாக இருந்த சிலம்பரசன் சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றம்.

10. உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி மாநில சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாக மாற்றம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version