10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் களம் காணுகின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மகளிர் டி 20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை வெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஜூன் 12 இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன. இங்கிலாந்தின் பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய அணி வரும் 14ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர் கொள்கிறது.
இரு பிரிவுகளாக மோதும் அணிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் 4 அணிகள் அறையிறுதிக்குள் நுழையும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version