முன்னாள் துணை முதல்வரின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும்,

கடல்சார் வாரிய செயலாளராக இருந்த டி.என்.வெங்கடேஷ்,  கைத்தறித் துறை முதன்மைச் செயலாளராகவும்,

உயர்கல்வித் துறை செயலராக இருந்த பிசங்கர், வேளாண்மைத் துறை செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேளாண் துறை இயக்குநராக இருந்த பி.முருகேஷ், மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும்,

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக ஜி.லதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விடுப்பில் இருந்து வரும் காயத்ரி கிருஷ்ணன் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராகவும்,

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழக இயக்குநர் கே.வி.முரளிதரன், வேளாண் துறை தலைவராகவும்,

நில அளவைத் துறை இயக்குநராக இருந்த தீபக் ஜேக்கப், அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும்

மாநில பேரிடர் குறைப்பு முகமை இயக்குநராக இருந்த முத்துக்குமரன் கரூர் மாவட்ட ஆட்சியராகவும்,

திருவள்ளூர் துணை கலெக்டர் அப்துல் ராசி, பொன்னேரி துணை கலெக்டராகவும்,

செங்கல்பட்டு துணை கலெக்டர் நல்லசிவன், ஸ்ரீபெரும்புதூர் துணை கலெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version