Close Menu
    What's Hot

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!
    Featured

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    Editor web1By Editor web1May 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TNEB 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மின்சாரத்துறையில் இனிமேல் எந்தவொரு புதிய டெண்டர் (ஒப்பந்தப் புள்ளி) அறிவிப்பை வெளியிடுவதற்கும் முன்பாக, மூன்று கட்ட ஆய்வுகளைக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மின்வாரியத்தின் கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

    3 புதிய குழுக்கள்

    டெண்டர்களை முறையாக ஆய்வு செய்வதற்காக மின்வாரியம் சார்பில் தற்போது 3 முக்கியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சந்தைப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்புக் குழு

    உள்நாட்டுச் சந்தையில் மூலப்பொருட்களின் தற்போதைய விலை நிலவரங்களை இக்குழு ஆய்வு செய்யும். மேலும், பல்வேறு வகையிலான விலைத் தரவுகளை மதிப்பீடு செய்வதுடன், தனியார் நிறுவனங்கள் அதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்பதையும் ஒப்பிட்டு ஆராயும்.

    உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழு

    மின்வாரியத்திற்குத் தேவைப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகளை, வெளிநாட்டுச் சந்தை நிலவரங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணியை இக்குழு மேற்கொள்ளும்.

    குறுக்கு சரிபார்ப்பு குழு 

    மேற்கண்ட சந்தைப் பகுப்பாய்வுக் குழு மற்றும் உற்பத்தியாளர் குழு அளித்த அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டு, அவற்றை அண்டை மாநிலங்களின் மின்வாரியங்கள் அதே பொருட்களை என்ன விலைக்குக் கொள்முதல் செய்கின்றன என்ற விபரங்களோடு குறுக்குச் சரிபார்ப்பு (Cross-Verify) செய்யும்.

    7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல்

    சந்தைப் பகுப்பாய்வுக் குழு மற்றும் உற்பத்தியாளர் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கைகள் கிடைத்த 7 நாட்களுக்குள், அவற்றை முழுமையாக ஆய்வு செய்து குறுக்கு சரிபார்ப்புக் குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    நிலுவையில் உள்ள டெண்டர்களுக்கும் பொருந்துமா?

    இந்த புதிய விதிமுறை இனிமேல் வரவிருக்கும் புதிய டெண்டர்களுக்கு மட்டுமன்றி, ஏற்கனவே வெளியிடப்பட்டு இன்னும் இறுதி செய்யப்படாமல் நிலுவையில் இருக்கும் அனைத்து டெண்டர்களுக்கும் பொருந்தும். அவையும் இக்குழுக்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே இறுதி செய்யப்படும் என்று மின்வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!
    Next Article விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்
    Editor web1
    • Website

    Related Posts

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.