தொழிற் துறையில் தமிழக மகளிர் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்து வருவதாக பெருமையடித்துக் கொள்ளும் நிலையில் நாள்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.

அதிலும் தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்த 35 நாட்களில் நிகழ்ந்துள்ள சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

  • கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை,
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை,
  • மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை,
  • தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி,
  • சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு மின்வாரிய ஊழியர் சீரங்கன் என்பவர் பாலியல் தொல்லை
  • சென்னை கோடம்பாக்கத்தில், 16 வயது சிறுவனுக்கு வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் பாலியல் வன்கொடுமை
  • சென்னை வேளச்சேரியில் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை
  • ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை
  • ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர், சிங்கப் பெண் படை பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு
  • திருவண்ணாமலையில் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்து, நகை பறிப்பு
  • தென்காசியில் மாணவிக்கு சென்னை போலீஸ்காரர் பாலியல் தொல்லை,
  • சென்னை கே.கே.நகரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
  • கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு வழக்கை வாபஸ் பெறக்கோரி, கல்லூரி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து, பாலியல் வன்கொடுமை
  • கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்டு கொலை,
  • பூந்தமல்லியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 41 வயது நபர் கைது,
  • தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் போதகரால் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
  • காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்கு 43 வயது பீகார் தொழிலாளி பாலியல் தொல்லை

 என  பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது.

மகளிர் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் படையை உருவாக்கி விட்டதாக முதலமைச்சர் வேண்டுமானால் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்

ஆனால்  உண்மை நிலவரம் அப்படி அல்ல என்பதை உணர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் .ஜோசப் விஜய் எப்போது போர்க்கால நடவடிக்கையை மேற்கொள்வாரோ?

மு.செய்யது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version