தமிழக காவல் அதிகாரிகள் 56 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 17 பேர் உள்பட தமிழ்நாடு காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் எஸ்பி-யாக ஜெயக்குமார், சேலம் எஸ்பி-யாக குத்தாலிங்கம், விழுப்புரம் எஸ்பி-யாக மதிவாணன், திருவண்ணாமலை எஸ்பி-யாக கார்த்திகேயன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர் எஸ்பி-யாக கவுதம் கோயல், கடலூர் எஸ்பி-யாக விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் எஸ்பி-யாக சாய் பிரனீத், தருமபுரி எஸ்பி-யாக அருண் கபிலன், கிருஷ்ணகிரி எஸ்பி-யாக அனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் எஸ்பி-யாக யாதவ் கிரிஷ் அசோக், மதுரை எஸ்பி-யாக யாதவ் தேவநாதன், நெல்லை எஸ்பி-யாக விஸ்வேஷ் பாலசுப்ரமணிய பாரதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை தலைமையிட டிஐஜி-யாகவும், தலைமையிட துணை ஆணையர் பாலகிருஷ்ணன் சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக கே.முத்துகுமார், பூக்கடை துணை ஆணையராக ஜி.கோபி, ஆவடி ஆணையரக தலைமையிட துணை ஆணையராக வனிதா, சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
