தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அண்ணா பஸ்நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளில் தலா ரூ.50 வீதம் நாளொன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதேபோல் நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளிலும் தலா ரூ. 50 வீதம் நாளொன்றுக்கு ரூ.33ஆயிரம் வசூல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
கோவில்பட்டி நகராட்சியில் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறி அங்கு கரும்புச் சாறு கடை நடத்துபவர் வரி வசூலிப்பதாக அந்தப் பகுதியில் பூக்கடை நடத்தும் மூதாட்டி தெரிவித்துள்ளார்.
இங்கு வரிவசூலுக்கு கோவில்பட்டி நகராட்சி பெயரில் போலியான ரசீது அடிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வளவு தொகை வசூலித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி நிர்வாகம் அவர்களைக் கண்டித்து மன்னித்து விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

