கோவை அரிசி பாளையம் அருகே, வி.கே.சி கம்பெனி சாலை ஓரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த ஒருவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அதிர்ச்சியுடன் அருகில் சென்று பார்த்தபோது, பிறந்து ஒரு மணி நேரமே ஆன அந்தப் பச்சிளம் குழந்தை சாலையில் கைவிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அரிசி பாளையம் மருத்துவமனையின் பிரதீபா, அந்த இடத்திலேயே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போத்தனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர், பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரமான நபர்களை அடையாளம் காணும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version