வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பேத்தியின் திருமண வரவேற்பு விழாவில், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்ட விதம் தான் இணையவாசிகள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திருமண மேடைக்கே உரிய கண்ணியத்தை மீறி, அந்தத் தலைவர் கழுத்து மற்றும் கை நிறைய 3 கிலோ மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துகொண்டு, சினிமா பாடலுக்கு உற்சாகமாக குத்தாட்டம் போட்ட காட்சிகள் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. ஒருபுறம் பிரம்மாண்டமான ஏற்பாடுகள், மறுபுறம் தலைவரின் இந்த ‘தங்க நகை’ நடனம் என விழா மேடையே கலகலப்பானது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version