Close Menu
    What's Hot

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முப்படை புதிய தளபதியாக  தமிழர் நியமனம் – யார் இந்த  ராஜா சுப்ரமணி ?
    Featured

    முப்படை புதிய தளபதியாக  தமிழர் நியமனம் – யார் இந்த  ராஜா சுப்ரமணி ?

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 raja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழரான ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

    தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதி முடிவடையும் நிலையில், புதிய தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த சேவையாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி, தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (NDA) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.

    சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றதோடு, டெல்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி பயின்றிருக்கிறார்.

    டெல்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) முன்னாள் மாணவரான ராஜா சுப்ரமணி 1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கி, ராணுவத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்திருக்கிறார்.

    மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ள இவர், தற்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது பணிக்காக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரமாண்டமாக நடைபெற்ற திருவாரூர் தெப்பத் திருவிழா – பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
    Next Article உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை
    Editor TN Talks

    Related Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    விஜய் முதலமைச்சராவார் – நான் சொன்னது நடந்துருச்சு – குஷியில் கேரள ரசிகர்

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் ஒழியாதவரை நிம்மதியில்லை – கனிமொழி எம்.பி

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026

    1 டாலர் = ரூ.96.11 ; இந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.