நடிகர் மாதவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜி டி என்’ திரைப்படத்தின் புதிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் மாதவன் இன்று தனது 56 அவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதவனின் பிறந்தநாளையொட்டி அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜி.டி.என் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜி.டி.நாயுடு?: ‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் கோபாலசுவாமி துரைசாமி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

‘ராக்கெட்ரி’ படத்திற்குப் பிறகு மாதவன் நடிக்கும் மற்றொரு பிரம்மாண்ட பயோபிக் இதுவாகும். கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கும் இப்படத்தில் சத்யராஜ், துஷாரா விஜயன், ஜெயராம், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள ‘G.D.N’ திரைப்படம், வரும் ஜூலை 17ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version