Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
    Featured

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    editor5By editor5July 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 23 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனுமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டு இந்த முக்கிய முடிவை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

    வீடியோவில் ரஹானே, “ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கமும், முடிவும் உண்டு என்பதே வாழ்க்கையின் நிதர்சனம். பேட்டிங்கில் சரியான டைமிங் முக்கியம் என நம்புபவன் நான். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலக இதுவே சரியான தருணம் என உணர்கிறேன்” என்று தெரிவித்தார். தனது டெஸ்ட் கேப் எண் 278-ஐ நினைவுகூர்ந்த அவர், “இத்தனை ஆண்டுகளாக எனக்கு அளித்த அன்பு, நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ‘அஜிங்க்யா’ என்ற பெயருக்கு ‘வெல்ல முடியாதவன்’ என்று பொருள் என்றாலும், கிரிக்கெட் தனக்கு தோல்விகளின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுத்ததாக அவர் உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார். “நாம் வெற்றிகளை விட தோல்விகளையே அதிகம் சந்திக்கிறோம். ஆனால் ரசிகர்களின் இதயங்களில் நான் ஒருபோதும் தோற்றதில்லை” என்ற அவரது வார்த்தைகள் பலரையும் நெகிழ வைத்துள்ளன.

    ரஹானே 2008-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்கு சேவை செய்துள்ளார். மூன்று வடிவங்களிலும் இதுவரை 8,414 ரன்களை 35.95 சராசரியில் குவித்துள்ளார். இதில் 15 சதங்களும், 51 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 85 போட்டிகளில் 5,077 ரன்களை எடுத்த அவர், 6 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். அந்தப் போட்டிகளில் 4 வெற்றிகளும் 2 டிராவும் கிடைத்தன. ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் போட்டிகளில் 90 ஆட்டங்களில் 2,962 ரன்களும், டி20 சர்வதேசத்தில் 20 போட்டிகளில் 375 ரன்களும் சேர்த்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 3 முறை கேப்டனாக செயல்பட்டு மூன்றிலும் வெற்றி பெற்றார். டி20-யில் 2 போட்டிகளில் தலைமை தாங்கினார்.ஐபிஎல் தொடரில் 2008 முதல் 212 போட்டிகளில் விளையாடிய ரஹானே 5,367 ரன்கள் குவித்துள்ளார்.

    2 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் இதில் அடங்கும். அவரது நிலையான பேட்டிங் மற்றும் தலைமைத்துவம் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கிய பங்களிப்பை அளித்துள்ளன.ரஹானேவின் ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது பங்களிப்பு எப்போதும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

    ajinkya rahane cricket Retirement
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!
    Next Article தமிழ்நாட்டில் எல் நினோ பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கை… சிறப்புக் குழு அமைத்து அரசாணை
    editor5

    Related Posts

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    July 31, 2026

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    July 31, 2026

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யின் கர்நாடக வருகைக்கு எதிர்ப்பு!. பெங்களூரு விமான நிலையத்தை முற்றுகையிட கன்னட அமைப்புகள் திட்டம்!

    நிலைமை சரியில்ல.. இப்ப வரவேண்டாம் விஜய்..!! கர்நாடக CM டி.கே.சிவக்குமார் கோரிக்கை..!!

    தப்பித்தார் செந்தில் பாலாஜி… முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம் …  பாஸ்போர்ட்டை ஒப்படைக்க உத்தரவு!

    நாளை ஆந்திரா, கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி..!! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..!!

    நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!! மாமல்லபுரம் பயிற்சி முகாமில் பங்கேற்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.