Close Menu
    What's Hot

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!
    Featured

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

    editor5By editor5July 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 36 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், அமைச்சர்கள் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடர்பான ஒரு ஆடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

    அந்த ஆடியோவில், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது தொகுதிக்குள் வந்து அதிகாரிகளை சந்திப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “என் தொகுதிக்குள் சாத்தூர் தொகுதிக்காரர்களை கால் வைக்க விட மாட்டேன். மீறி வந்தால் தூக்கி வைத்து கொன்று புதைத்துவிடுவேன்” என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இந்த உரையாடல் தவெக ஒன்றிய செயலாளர் ராஜகுருவுடன் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

    இந்த ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து திமுக ஐடி விங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “தவெக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன. மக்கள் நலனுக்காக பணியாற்ற வேண்டியவர்கள் ரவுடி பாணியில் மிரட்டல் விடுவது ஜனநாயகத்துக்கு அவமானம். சட்டத்தை கையில் எடுக்கும் இத்தகைய போக்கு மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது” என அக்கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், மிரட்டலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

    இதனிடையே, இந்த ஆடியோ அமைச்சர் பொறுப்பேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டது எனவும், எதிர்முனையில் பேசிய ராஜகுரு அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகர் மாவட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஆடியோவின் உண்மைத்தன்மை மற்றும் சூழல் குறித்து முழுமையான விளக்கம் இன்னும் அமைச்சர் தரப்பிலிருந்து வரவில்லை. இந்த சம்பவத்துடன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கில்லி சரத் தொடர்பான பழைய வீடியோ, அமைச்சர் விஜய் பாலாஜியின் சர்ச்சைக்குரிய பேச்சு, அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் தவெக அரசுக்கு சவாலாக மாறியுள்ளன.

    எச்சரிக்கைகள் இருந்தும் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் சர்ச்சைகளில் சிக்குவது அரசின் இமேஜை பாதிக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாக ஒழுக்கம் குறித்து புதிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மீது மக்களின் கவனம் தீவிரமாக உள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கை பாதிக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

    dmk it wing Jegatheeswari Minister
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!
    Next Article இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!
    editor5

    Related Posts

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    July 27, 2026

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    July 27, 2026

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரூர் உயிரிழப்பு: 31 குடும்பங்களுக்கு வழங்கிய அரசு வேலை ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு போறீங்களா? இவங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்..!!

    என் ஏரியாவுக்குள்ள வர்றியா? ஜெகதீஸ்வரி பெயரில் பரவும் ஆடியோ.. அரசியல் களத்தில் புதிய விவாதம்!

     ‘இணையற்ற இலக்கியத் திறமை’…ஞானபீட விருது பெற்றவைரமுத்துவிற்கு அமித் ஷா வாழ்த்து!

    சாதி சான்றிதழ் விவகாரத்தில் தமிழக அரசின் புதிய உத்தரவு.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.