Close Menu
    What's Hot

    உண்மையான முதலமைச்சராக விஜய் செயல்படுகிறாரா..?? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!
    Featured

    தவெகவுக்கு ஆதரவளிக்கிறேனா?. லியோனியின் விமர்சனத்திற்கு வைகோ பதிலடி!

    Editor web3By Editor web3June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    leoni vaiko reaction
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, கலைஞருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, தன் மீது விமர்சனம் வைத்த  திண்டுக்கல் ஐ. லியோனிக்குத் தன் பாணியில் அதிரடியாகப் பதிலடி கொடுத்தார்.

    முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்குப் பிரம்மாண்ட சிலை எழுப்பியவர் கலைஞர். தந்தை பெரியாரின் சமூகநீதிக் கனவுகளைத் தன் ஆட்சிக் காலத்தில் நினைவாக்கியவர் அவர். முப்பது ஆண்டுகாலம் அவரால் வளர்க்கப்பட்டவன் நான்; இன்றளவும் எனது நெஞ்சில் இருந்து கலைஞரின் நினைவுகளை யாராலும் அகற்ற முடியாது. அவரது புகழ் என்றும் வளரட்டும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக ஆதரவளிக்கப் போகிறது என்று திண்டுக்கல் ஐ. லியோனி பேசியுள்ளார். தவெக-விற்கு ஆதரவளிப்பது தொடர்பாக நான் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

    கடந்த தேர்தலில் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடாமல் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது குறித்த விமர்சனத்திற்குப் பதிலளித்த வைகோ, “கூட்டணியில் இருந்துகொண்டு, அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் தங்களது சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எல்லாம் இன்றைக்கு அமைச்சரவையில் முக்கிய இடங்களைப் பிடித்து அமர்ந்திருக்கிறார்கள் (விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகளைச் சுட்டிக்காட்டி). திமுக என்ற நமது சகோதரர்கள் நம் மீது கோபப்பட்டாலும், அதனை ஒரு குடும்பத்திற்குள் இருக்கும் உரிமையோடு வெளிப்படும் கோபமாகவே நான் பார்க்கிறேன்” என்று கூறினார்.

    உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக நிர்பந்திக்கப்பட்டது என வைகோ நேற்று கூறியிருந்த கருத்துக்கு, “வைகோ இப்படிப் பேசுவதில் ஆச்சரியமில்லை; அவர் தவெக பக்கம் போகத் தயாராகிவிட்டார்” என திண்டுக்கல் ஐ. லியோனி சாடியிருந்த நிலையில், அதற்கு வைகோ தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாவட்ட வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!
    Next Article கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் இன்று..!! புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    உண்மையான முதலமைச்சராக விஜய் செயல்படுகிறாரா..?? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

    June 3, 2026

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    June 3, 2026

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உண்மையான முதலமைச்சராக விஜய் செயல்படுகிறாரா..?? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

    தூத்துக்குடி : ரூ.72 லட்சம் பண மோசடி..! தவெக நிர்வாகி – மனைவி மீது வழக்குப் பதிவு..!

    பருவமழை பொய்க்கும் அபாயம்!. அடுத்த 3 மாதங்களுக்கு கடும் வறட்சி நிலவும்!. WMO எச்சரிக்கை!.

    செஸ் உலகில் சாதனை..!! கார்ல்சனை வீழ்த்தி கெத்து காட்டும் பிரக்ஞானந்தா..!!

    தென்மேற்கு பருவமழை: கேரளாவில் ஜூன் 4ம் தேதி தொடக்கம்.. IMD அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.