கவியரசு கண்ணதாசனின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யும், கவியரசுக்கு பிறந்தநாள் புகழ் வணக்கங்களைத் தெரிவித்துள்ளார்.
கவியரசு கண்ணதாசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தி கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தமிழ் இலக்கிய உலகிலும், தமிழ்த் திரையிசை வரலாற்றிலும் தனி முத்திரை பதித்து நூற்றாண்டு காணும் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கங்கள்.
மனித வாழ்வின் உணர்வுகளையும், தத்துவச் சிந்தனைகளையும், சமூக விழிப்புணர்வையும் தனது படைப்புகளின் மூலம் எளிய தமிழில் தந்து அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காலங்களைக் கடந்தும் தலைமுறைகளை வழிநடத்தும் இலக்கியப் பொக்கிஷங்களாக அவரது படைப்புகள் திகழ்கின்றன எனவும்,
தமிழ்மொழி உள்ளவரை கவியரசரின் புகழும் படைப்புகளும் என்றும் நிலைத்திருக்கும் எனவும் தனது புகழ் வணக்கத்தை தெரிவித்துள்ளார்.
