தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 21ம் தேதி ஆத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், நான் ஒரு வியாபாரி, என் கடைக்கு வருபவர் பணம் வைத்துக் கொண்டு பொருள் வாங்க வருகிறாரா அல்லது கடன் வாங்க வருகிறாரா என்று அவர் முகத்தை வைத்து கண்டுபிடித்து விடுவேன். அதேபோல் முதலமைச்சர் விஜய்யின் முகத்தை பார்க்கும் போது சினிமாவில் நடித்துக் கொண்டு நடிகையோடு சந்தோஷமாக இருந்த என்னை இப்படி அரசியலில் மாட்டி விட்டீர்களே என்று முழிப்பது போல் முகம் உள்ளது என பேசியதாக தெரிகிறது.

இந்தநிலையில், முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது ஆத்தூர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version