Close Menu
    What's Hot

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!
    Featured

    யாரும் பனையூருக்கு விருப்ப மனு வாங்க வராதீங்க..! தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அறிவிப்பால் நிர்வாகிகள் அதிர்ச்சி..!

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக சார்பில் வழங்கப்படும் விருப்ப மனுக்கள பெற பனையூர் அலுவலகத்திற்கு யாரும் வரவேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக சார்பில் நேற்று ( 06.02.2026 ) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. இதனைப் பெறுவதற்காக பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

    விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் 14-ம் தேதி வரை அலுவலகத்தில் நிர்வாகிகள் பொறுமையாக விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுச்செயலாளர் ஆனந்த், விருப்ப மனுக்களை பெற யாரும் கட்சி அலுவலகம் வரவேண்டாம் என கூறியிருப்பது நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளில், ஆயிரக்கணக்கான மக்கள் பனையூர் பகுதியில் குவிந்ததால், வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்பட்ட சிக்கல், அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறு, அவர்களது கார்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதம் என பலகட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நேரடியாகவே நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் புகாரும் அளித்திருந்தனர். ஆகையால் பனையூரில் விருப்ப மனுக்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஆகையால் தான், விருப்ப மனுக்களை பெற யாரும் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டாம் என ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், இன்று ( 07.02.2026 ) முதல் கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தலைமை அலுவலகம் இருக்கும் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இட நெருக்கடியும் ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டுள்ளோம்.

    எனவே மக்கள் மீது அக்கறை கொண்ட தளபதி விஜய்யின் அறிவுறுத்தலின் பேரி, விருப்ப மனுக்களை பெற நிர்வாகிகள் யாரும் தலைமை அலுவலகம் வர வேணாம் எனவும், அதற்கு பதில் மனுக்களை இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

    2026 சட்டமன்ற தேர்தல் DMK panaiyur politics pussy aanand tamilnadu TVK tvk vijay தமிழ்நாடு தவெக தவெக தலைவர் விஜய் புஸ்ஸி ஆனந்த்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியவுக்கு பிரதமர் மோடியின் நற்செய்தி..! அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தின் கூட்டறிக்கை சொல்வது என்ன?
    Next Article மலேசியா புறப்பட்ட பிரதமர் மோடி…! பாதுகாப்பு, பொருளாதார உறவுகள் மேம்படுத்தப்படும் என தகவல்…!
    Editor TN Talks

    Related Posts

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    February 15, 2026

     மகளிருக்கு ரூ.5,000!. கொந்தளிக்கும் பெண்கள்!. ஸ்டாலினுக்கு அடுத்த அதிர்ச்சி!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    மகா சிவராத்திரி விரதத்தை இவர்கள் எல்லாம் கடைப்பிடிக்கக்கூடாது!. விதிகள் என்ன தெரியுமா?

    Trending Posts

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    முல்லைக்காடு கப்பல் கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!. பிரேமலதா விஜயகாந்த்!

    February 15, 2026

    IND vs PAK T20| இந்தியா வெற்றிபெற நாடு முழுவதும் ரசிகர்கள் வழிபாடு!. 

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.