திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத்  சாமி தரிசனம் செய்தார்.

உலகப் பிரசித்தி பெற்ற அக்னி ஸ்தலத்திற்கு வருகை தந்த அனிருத், முதலில் சம்பந்த விநாயகரை மனமுருகி வழிப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதிகளுக்குச் சென்று சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார். வைகுந்த வாயில் பகுதியில் தீபமாலை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து சிறப்பான மரியாதை செய்யப்பட்டது.

இசையமைப்பாளர் அனிருத் கோவிலுக்கு வந்திருப்பதை அறிந்த பக்தர்கள் மற்றும் அங்கிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும், அவரைச் சூழ்ந்துகொண்டு மிகுந்த உற்சாகத்துடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். ரசிகர்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, அனிருத்தும் புன்னகையோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version