சென்னை வானகரத்தில் நடைபெற்ற திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். தம்பதிகளை வாழ்த்திய பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,

“ ஆற்றலுக்கும், கொள்கை பிடிப்புக்கும் இலக்கணம் ஆற்காடு வீராசாமி. சிறைச்சாலையில் எனக்கு அறிவுரை வழங்கியவர் ஆற்காடு வீராசாமி, மிசாவில் ஏற்பட்ட தழும்பு இன்றும் என் கையில் உள்ளது” என்றார்.

“ கோட் அணிவதும், பட்டு ஏட்டி அணிவதும் இன்று செய்திகளாகி கொண்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் செஸ் விளையாடியது தான் செய்தியாக வருகிறது. ஆட்சியை பற்றி வரும் செய்திகளை படியுங்கள். படித்து உண்மையை கண்டுபிடிதிது, அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதே என் அன்பான வேண்டுகோள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக்கழகம்” எனக் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version