தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 25) காலை 10:00 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே இந்த மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) அறிவித்துள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இன்று காலை 10:00 மணி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 17, மாலை 5:00 மணி வரை. இணையதள முகவரி: https://adm.tanuvas.ac.in.

மிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடைமருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. – ஏ.ஹெச்) 660 இடங்கள் உள்ளன.

தமிழக அரசின் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், அரசுப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக பி.வி.எஸ்சி மற்றும் பி.டெக் படிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்கள் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மதிப்பெண் தகுதி மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் தகுதியான மாணவ-மாணவிகள் ஜூன் 17-ஆம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version