Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!
    Featured

    ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியல.. 2.0 தேவைப்பட்டாலும் முப்படைகள் தயார்..!! ராணுவ தலைமை தளபதி அதிரடி..!!

    editor5By editor5May 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 40 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வான் மற்றும் கடல் ஆகியவற்றை கடந்து நவீன முறையில் செயல்பட கூடிய வகையில் நம்முடைய முப்படைகளின் கூட்டு சக்தி உள்ளது என்று கூறினார் உபேந்திரா திவேதி.

    மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கலந்துகொண்டு உரையாற்றினார். நாட்டின் பாதுகாப்பு வலிமையை வலியுறுத்திய அவர், தற்போதைய நவீன போர் சூழலில் இந்திய முப்படைகளின் ஒருங்கிணைந்த திறனைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

    ராணுவத் தலைமைத் தளபதி திவேதி கூறியதாவது, “நிலம், வான், கடல் ஆகிய மரபுவழி போர் முனைகளைத் தாண்டி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இயங்கும் வலிமை நமது முப்படைகளுக்கு உள்ளது. இந்த ஒருங்கிணைந்த சக்தியானது எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்கிறது” என்றார். பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி உயிர்களைப் பலி கொடுத்த சம்பவத்துக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை அவர் சுட்டிக்காட்டினார்.

    பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்த நடவடிக்கையில் துல்லியமாகத் தாக்கி அழித்ததாகக் குறிப்பிட்ட அவர், “ஆபரேசன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. தற்போது தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேவை ஏற்பட்டால் ஆபரேசன் சிந்தூர் 2.0 உடனடியாக செயல்படுத்த முப்படைகளும் முழு தயார் நிலையில் உள்ளன” என்று உறுதியளித்தார். வருங்காலப் போர்கள் பாரம்பரிய முறைகளில் மட்டும் நடைபெறாது என்று எச்சரித்த தளபதி, “விண்வெளி, சைபர் தாக்குதல்கள் மற்றும் அறிவுசார் (Intelligence-based) நடவடிக்கைகள் எதிர்காலப் போர்க்களங்களின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

    நவீன போர் முனைகள் மிகவும் வெளிப்படையானவை. ஒரு தரப்பின் நடவடிக்கை மற்ற தரப்புக்கு உடனடியாகத் தெரியும் நிலை உருவாகியுள்ளது” என்றார். இதனால், படை குவிப்பு, ராணுவ ஆள் சேர்ப்பு, எல்லைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அங்குள்ள குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். எல்லைப் பாதுகாப்பில் ஏற்படும் எந்தவித சிறு தவறும் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு மிக முக்கியம் என்று சுட்டிக்காட்டினார்.

    இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு, இந்தியாவின் பாதுகாப்பு கொள்கையின் திசைவழியை தெளிவுபடுத்துவதாக அமைந்தது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் இளம் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் சூழலில், உயர் தலைமைத்துவம் வழங்கிய இந்த அறிவுரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்திய முப்படைகளின் தயார் நிலை மற்றும் ஒருங்கிணைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு வலு சேர்க்கும் என்ற நம்பிக்கையை இந்த உரை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும்!. வானிலை ஆய்வு மையம்
    Next Article ஒரு லிட்டர் குடிநீர் ரூ.8!. சென்னை ரயில் நிலையங்களில் தானியங்கி இயந்திரங்கள் திறப்பு!
    editor5

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.