அடுத்த 4 – 5 நாள்களில் தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் சில பகுதிகளுக்கு நுழைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. இன்றைய நிலவரப்படி (மே 30), பருவமழையானது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், லட்சத்தீவு, குமரிக்கடல் பகுதிகள், மற்றும் தென்மேற்கு, தென்கிழக்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளுடன் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகளிலும் மேலும் பலத்த முன்னேற்றம் அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த 4 முதல் 5 நாட்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து முன்னேறுவதற்குச் சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால் அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளின் மேலும் சில இடங்களுக்கும், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுக்கும், அத்துடன் தென்மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு, வடகிழக்கு வங்காள விரிகுடாவின் எஞ்சிய பகுதிகளுக்கும் பருவமழை அடுத்த சில நாட்களில் பரவக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 90% அளவிற்கு பருவமழை குறைந்து பதிவாக கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
