மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம் பகுதியில், மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்த முக்கியச் சாலையின் நடுவே பெண் ஒருவர் திடீரென தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளி (45) என்ற அந்தப் பெண், வீடுகளில் வேலை செய்து தினசரி வாழ்க்கையை ஓட்டவே மிகவும் சிரமப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடுமையான வறுமையின் காரணமாக மனமுடைந்த அவர், தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனே அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வள்ளியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மதிச்சியம் போலீசார், அந்தப் பெண் வறுமையால் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் பெண் ஒருவர் தீக்குளித்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version