தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இதற்கான அட்டவணையை வெளியிட்டார். அதன்படி, மே 10ம் தேதியுடன் முடிவடையும் தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் முக்கியத் தகவல்கள்: 

வாக்குப்பதிவு நடைபெறும் நாள்:  ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: மே. 4

வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்: மார்ச். 30

வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள்: ஏப்ரல்.6

வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் . 7

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இறுதி நாள்: ஏப்ரல் . 9

இதேபோல் அசாம்,  கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 தேதிகளில் இரு கட்டங்கங்களாக  வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4 தேதி நடைபெறும். அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒரே கட்டமாகத் தேர்தல்: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version