Close Menu
    What's Hot

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது
    Featured

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    Editor web2By Editor web2June 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CBSE students
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேசிய கல்விக் கொள்​கை 2020-ன்​படி 2026-27-ம் கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்​பில் இருந்து மும்​மொழி திட்டம் அறி​முகம் செய்​யப்​படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ ( CBSE)  கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்து இருந்தது.

    மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மேலும், ஒரு பள்ளி 6-ம் வகுப்​பில் எந்த 3-வது மொழியை அறி​முகம் செய்​கிறதோ, அதே மொழி​தான் அந்த பள்​ளிக்​கான 9, 10-ம் வகுப்​பு​களில் விருப்பப் பாட​மாக இருக்​கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கடந்த மே 15-ம் தேதி வெளியிட்ட புதிய அறிவிப்பில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் மும்மொழி திட்டத்தை கட்டாயமாக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியது. சிபிஎஸ்இ-யின் இந்த திடீர் அறிவிப்பு, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    CBSE

    இந்த நிலையில் எதிர்ப்புக்கு பணிந்து, சிபிஎஸ்இ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,  ”தற்போது 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் புதிய மும்மொழித் திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை. மேலும், தற்போது 7, 8, 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 10-ம் வகுப்பை அடையும்போது மூன்றாவது மொழிக்குத் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

    ஏற்கெனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்கள் அதே மொழிகளைத் தொடரலாம். அதே நேரத்தில் அவர்கள் கூடுதலாக ஓர் இந்திய மொழியைக் கற்க அனுமதிக்கப்படுவார்கள். வகுப்புக்கு ஏற்ற பாட புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். அவற்றில் குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் இருக்க வேண்டும். ஏற்கெனவே, இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் மாணவர்கள் மூன்றாவது மொழியாக ஓர் இந்திய மொழியைச் சேர்த்துக்கொள்ளலாம்.

    கூடுதல் மொழிக்கு பள்ளி அளவிலான உள் மதிப்பீட்டு நடைமுறை மட்டுமே பின்பற்றப்படும். இவர்கள் 10-ம் வகுப்புக்குச் செல்லும்போது மூன்றாவது மொழிக்கு தேர்வு இருக்காது. இதேபோல், தற்போது 7 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் இதே இடைக்கால தளர்வு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    CBSE EducationNews ParentsVoice ThreeLanguage
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article”அப்பாவுக்கு மரியாதை… அம்மாவிடம் ஆறுதல்…” –   விஜய் குறித்து சாந்தனு நெகிழ்ச்சி
    Next Article ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்
    Editor web2
    • Website

    Related Posts

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    July 19, 2026

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    July 19, 2026

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீர் தொழில்நுட்ப கோளாறு.. முடங்கிய பேஸ்புக் சேவை.. உலகம் முழுவதும் பயனர்கள் பாதிப்பு..!!

    குதிரை பேரம் விவகாரம் – கரூரில் பைனான்ஸ் அலுவலகத்திற்கு ’சீல்’  

    தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் திரையுலக கலைஞர்கள் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    விஜய்க்கு ஒரு ஆபத்துனா அது இவரால தான் வரும்..!! ஆதவ் அர்ஜுனாவை கைகாட்டிய ஆர்.எஸ்.பாரதி..!!

    பரபரப்பான அனைத்துக்கட்சி கூட்டம்..!! வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்..!! காரணம் என்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.