வருடா வருடம் கேரளாவில் பருவமழையின் போது நிலசரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் இந்தாண்டு அங்கு பெய்த கனமழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மண்ணுக்கு அடியில் காணாமல் போனவர்களை தேடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் வி.டி.சதீஷன், கல்லாடியில் கனமழையை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. நிலச்சரிவில் கட்டுமான பொருட்கள், எந்திரங் கள் சேதம் அடைந்துள்ளன. கட்டுமான பணிக்காக பாறைகளை வெடிமருந்து வைத்து தகர்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பட்ட கன்டெய்னர்கள், மண் அள்ளும் எந்திரம் போன்றவை மண்ணுக்கடியில் புதைந்துள்ளன.’ சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் குவிக்கப்பட்டு இருந்த மணல் குன்று களை நீக்க ஏற்கனவே மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அந்த உத்தரவு மீறப்பட்டதே இந்த துயர சம்பவத்திற்கு காரணம். இது மிகவும் துரதிர்ஷ்டமான பேரழிவு ஆகும். மண்ணுக்கடியில் சிக்கியவர்களை மீட்டும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்பட 300-க்கு மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version