Close Menu
    What's Hot

    கத்தாரில் பயங்கரம்!. வெடித்து சிதறிய எரிவாயு ஆலை!. 18 பேர் மாயம்; 54 பேர் காயம்!

    பிஃபா உலகக்கோப்பை 2026!. நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை!

    அதிமுக, திமுகவால் முடியாத மேஜிக்!. தமிழக அரசியலில் விஜய் செய்த அரிய சாதனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்!. அமைச்சர்கள் வாழ்த்து!
    Featured

    முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்!. அமைச்சர்கள் வாழ்த்து!

    Editor web3By Editor web3June 22, 2026Updated:June 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறீர்கள் என முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அமைச்சர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    அந்தவகையில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் பதிவில், “மதிப்பிற்குரிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் ஜோசப் விஜய்க்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; “மக்கள்தானே மன்னர்கள்” என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள். இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது “மக்கள் ஊழியனாக” அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.

    “மக்களிடம் செல்” என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. “மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே” என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன்.உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு வெளியிட்ட வாழ்த்து பதிவில், “தேர்தல் அரசியலில் பணபலம் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்கிற பிம்பத்தைச் சுக்குநூறாக உடைத்தெறிந்து, ஒரு சாமானியனும் வெல்ல முடியும் என்ற புதிய வரலாற்றைப் படைத்த மக்கள் நாயகன் நீங்கள்! 33 ஆண்டுகால கடின உழைப்பால், சோதனைகளை சாதனைகளாக்கி, இன்று எவராலும் எட்ட முடியாத உயரத்தை எட்டியுள்ளீர்கள். நேர்மையுடன் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு உங்களை விட ஒரு சிறந்த முன் உதாரணம் இருக்க முடியாது! இளைஞர்களின் எழுச்சி நாயகனாய், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் அன்பு நட்சத்திரமாய் விளங்கும் முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.

    அதேபோல் வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டை புதிய பாதையில் வழிநடத்தும் முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நம் நெஞ்சினில் வாழும் அன்பு அண்ணன் தளபதிக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

    இதேபோல், அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு வாழ்த்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கோடிக்கணக்கான மக்களின் அன்பை பெற்று ஆட்சியில் அமரவும், தெருக் கோடியில் இருப்பவர்களை கூட அதிகாரத்திற்கு வர வைக்கவும் இந்த யுகத்தில் பிறந்த ஒரே தலைவர் நீங்கள் தான். ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் அரசியல் மாற்றமே நிகழ்வதற்காக மக்கள் தங்களில் ஒருவரான உங்களை நம்பிவிட்டார்கள். இந்த நம்பிக்கை நிரந்தரமாக மக்களை ஆளப்போவது நீங்கள் தான் என தினமும் விசிலடித்து ஒலிக்கிறது! வெற்றி நிச்சயம்! வாகை சூடுவோம்! என்று பதிவிட்டுள்ளார்.
    Aadhav Arjuna cm vijay cm vijay birthday ministers wishes Tamilnadu cm tn cm vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வர் விஜய்க்கு இன்று 52வது பிறந்தநாள்..!! பிரதமர் மோடி, மு.க ஸ்டாலின் வாழ்த்து..!!
    Next Article காலை வாரிவிட்ட ‘கூகுள் மேப்’..!! WRONG ரூட்டால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    கத்தாரில் பயங்கரம்!. வெடித்து சிதறிய எரிவாயு ஆலை!. 18 பேர் மாயம்; 54 பேர் காயம்!

    June 22, 2026

    பிஃபா உலகக்கோப்பை 2026!. நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை!

    June 22, 2026

    அதிமுக, திமுகவால் முடியாத மேஜிக்!. தமிழக அரசியலில் விஜய் செய்த அரிய சாதனை!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கத்தாரில் பயங்கரம்!. வெடித்து சிதறிய எரிவாயு ஆலை!. 18 பேர் மாயம்; 54 பேர் காயம்!

    பிஃபா உலகக்கோப்பை 2026!. நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து வரலாற்று சாதனை!

    அதிமுக, திமுகவால் முடியாத மேஜிக்!. தமிழக அரசியலில் விஜய் செய்த அரிய சாதனை!

    உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்: செல்போனில் ஆபாச படம்.. வெறியில் 9 மாத குழந்தையை சீரழித்த 12 வயது சிறுவன்..!!

    காலை வாரிவிட்ட ‘கூகுள் மேப்’..!! WRONG ரூட்டால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.