கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் நிறுவனர் அபிஜித் டிப்கே, மக்களின் பிரச்சினைகளை நேரடியாக அறியும் நோக்கில் ‘என்ன சொல்கிறார்கள் மக்கள்’ (Kya Bolti Public) என்ற நாடு தழுவிய மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த பிரச்சாரத்தின் முதல் கட்டமாக கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அபிஜித் டிப்கே, “நாங்கள் முதலில் எடுத்துக்கொள்ளும் பிரச்சினை கல்விச் சீர்திருத்தம். நாட்டில் தரமான கல்வி பெறுவது பல குடும்பங்களுக்கு எட்டாத ஒன்றாக மாறிவிட்டது. முதல் வகுப்பிலேயே ஆண்டுக் கட்டணம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதற்கு மேலாக நன்கொடையும் கேட்கப்படுகிறது” என்றார்.

மேலும், “அவ்வளவு வருமானம் இல்லாத நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இந்தக் கட்டணங்களை எப்படி செலுத்த முடியும்? குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது” என்று அவர் கூறினார்.

கல்லூரிகள் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி (Coaching) மையங்களின் கட்டணமும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட டிப்கே, “உயர் கல்வி அளிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் பொருளாதார சுமையின்றி இருக்க வேண்டும். கல்விக்காக குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கக் கூடாது” என்றார்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை மேற்கோள் காட்டிய அவர், “அம்பேத்கரின் பார்வையில் கல்வி என்பது அடிப்படை உரிமை. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் கல்வி ஒரு அடிப்படை உரிமையாக இல்லாமல், வணிகமாக மாறிவிட்டது” என்று குற்றம்சாட்டினார்.

மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு, அதற்கான தீர்வுகளை முன்வைப்பதே ‘என்ன சொல்கிறார்கள் மக்கள்’ பிரச்சாரத்தின் நோக்கம் என்றும் அபிஜித் டிப்கே தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version