Close Menu
    What's Hot

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மருத்துவர்கள் தின வாழ்த்து
    Featured

    மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், மருத்துவர்கள் தின வாழ்த்து

    Editor TN TalksBy Editor TN TalksJuly 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 Doctors day
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உயிர்காகும் உன்னதப் பணியில் தங்களை ஈடுபடுத்தும் மருத்துவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சியினர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் வாழ்த்தில் கூறியுள்ளதாவது…

    மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.

    மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.

    001 Doctors day A

     அமமுக பொதுச் செயலாளர் டிடிவிதினகரன்;-

    பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உயிரைக் காக்கும் உன்னத பணியை தங்களின் கடமையாக மட்டுமல்லாது, மனிதநேய சேவையாகவும் கருதி பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கருணை, மனிதநேயம் மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டு பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் பணியில் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் அனைவரின் தன்னலமற்ற சேவையையும், அர்ப்பணிப்பு உணர்வையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்

    பாஜக மூத்தத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்;-

    “Behind the Mask: Who Heals the Healers” மருத்துவர்கள் நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்களை போல் பார்த்துக் கொள்ள வேண்டும், நோயாளிகளும் மருத்துவர்களை தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் அன்பு செலுத்த வேண்டும். தன்னலமற்ற சேவை செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் எனது மனமார்ந்த மருத்துவ தின வாழ்த்துகள்… மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக வருபவர்கள் மருத்துவர் களை இறைநிலையில் வைத்து கொண்டாடுகிறார்கள்..

    கரோனா போன்ற பேரிடர் காலங்களில்  பல மருத்துவர்கள் தன்னலமற்ற சேவையினால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.. அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் நாளாக இந்த மருத்துவர் தினம் இருக்கட்டும்.

    உயிர் காக்கும் மருத்துவர்கள் அனைவரும் தாங்களும் மகிழ்ந்து தம்மிடம் வருபவர்களையும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்!..

    CM Joseph Vijay Doctors Doctors Day Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2013-ல் நடந்த சிறுவன் கொலை வழக்கு..! பிரபல தொழிலதிபர் ஷாஜி குற்றவாளி என தீர்ப்பு..!
    Next Article ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக..! இயக்குநர் பா.ரஞ்சித் ஆதங்கம்..!
    Editor TN Talks

    Related Posts

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    July 1, 2026

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    July 1, 2026

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    யஷ்-இன் ‘டாக்ஸிக்’ நாயகிகள் டீசர் வெளியீடு!. மிரட்டலான தோற்றத்தில் நடிகை நயன்தாரா!

    திமுக ஆட்சியில் ஏமாற்றப்பட்ட ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு

    40 வருட காத்திருப்பு!. ஈக்வடாரை சாய்த்த மெக்ஸிகோ!. அடுத்த சுற்றுக்குத் தகுதி!

    தவெக MLA-வை மிரட்டி பேரம்..!! செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவரை தட்டித்தூக்கிய போலீஸ்..!!

    தனியார் கல்வி நிறுவனங்கள் தொடந்த வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.