சென்னை பெரம்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.

முதலமைச்சரான பிறகு தன்னுடைய பெரம்பூர் தொகுதிக்கு தவெக தலைவர் ச.ஜோசப் விஜய் முதல்முறையாக வருகை தந்தார். அவரை சாலையின் இரு மருங்கிலும் நின்று பொதுமக்களும், தவெக தொண்டர்களும், கையசைத்தபடியும், மலர்களைத் தூவியும் வரவேற்றனர்.

பெரம்பூரில் 3 நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் கலது கொள்கிறார். முதலாவதாக பெரம்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் ரிப்பனை வெட்டித் திறந்து வைத்தார். பின்னர் அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த தவெக கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியவர் அலுவலகத்தைப் பார்வையிட்டபின்னர், தனது இருக்கையில் அமர்ந்தார்.

அவருக்கு அமைச்சர்கள் கே.எ.எஸ். செங்கோட்டையன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த இசேவை மையத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

 இதனைத் தொடர்ந்து பின்னர், தொகுதி மக்கள் தங்கள் குறைகளைப் புகார் அளிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றினையும் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து,  தமிழ்நாடு முழுவதும்  73ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய  ரேசன் அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார். இதையொட்டி பெரம்பூர் பயனாளிகளில் 50 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும்  10 ரேஷன் அட்டைதாரர்களுக்கு  ரேசன் பொருட்களையும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்.

இதன்பின்னர்,  வியாசர்பாடிக்கு செல்லும் முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு புதிய மின் பேருந்து பணிமனையைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வின்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் முதலமைச்சரிடம் கலந்துரையாட வாய்ப்பு உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version