அண்டை மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகள் குறித்து ஆராய விரைவில் உயர்மட்ட குழு  அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் கிடங்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகமே செலுத்தும் வகையில் மின்சாரத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், வாடகைக் கடைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கான வாடகைகளையும் அரசே செலுத்தும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் ஒரு நடவடிக்கையாக அண்டை மாநில அண்டை மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் செயல்பாடுகள் குறித்து ஆராய விரைவில் உயர்மட்ட குழு  அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version