Close Menu
    What's Hot

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!
    Featured

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    Editor web4By Editor web4July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூர் பேட்டை பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், “எங்கள் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் எங்கள் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவிலில் சாமிக்கு சொந்தமான தங்க நகைகளை தங்கள் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் ஏதாவது கஷ்டம் என்று கேட்டால் அந்த நகைகளை கொடுத்து உதவுவது வழக்கம்.

    சில மாதங்களில் நகைகளை வாங்கிய நபர்கள் அதற்கு மேலாக கோவிலுக்கு என தங்களால் முடிந்த பண உதவிகளை செய்வதும் உண்டு. அதுபோல கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதர் நாட்டார் பொறுப்பில் இருந்த 510 கிராம் கோவில் நகைகளை அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார், செல்வி, வெங்கடேசன், தொழில் தொடங்க வேண்டும் எனக் கூறி கோவிலுக்கு சொந்தமான நகைகள் வேண்டும் எனவும் மூன்று மாதங்களில் திருப்பித் தருகிறேன் என்று கூறி ஊரார் முன்னிலையில் வாங்கி சென்றார்.

    ஆனால் தற்போது 18 மாதங்கள் ஆகியும் நகைகளை தராமல் மோசடியில் ஈடுபட்டு ஸ்ரீதர் நாட்டாருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இது குறித்து ஊர் பொதுமக்கள் வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இது குறித்து ஸ்ரீதர் நாட்டார் கோவிலுக்கு சொந்தமான நகைகளை திரும்ப கொடு என கேட்கும் பொழுது இவர் மீது பொய்யான புகார் சரவணன் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவிலுக்கு சொந்தமான 510 கிராம் தற்போதைய மதிப்பில் 76 லட்சம் ரூபாய் வர இருக்கும். எனவே கோவில் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர்களிடம் இருந்து நகைகளை மீட்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!
    Next Article டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!
    Editor web4

    Related Posts

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    July 21, 2026

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    July 21, 2026

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பரந்தூர் விமான நிலையம்:  தவெக அரசின் தற்போதைய நிலை என்ன?

    1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!

    அரசு மதுபான கடைகள் தனியார் மயம்… திட்டம்  விவாதத்தில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.