பிரதமர் மோடி ஆட்சியில் தன்னிறைவு இந்தியா என்பது வெற்று விளம்பர முழக்கமாகவே உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் செய்யது நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

உலகின் மருந்தகமாக (Pharmacy of the World) இந்தியா அறியப்பட்டாலும், அத்தியாவசிய மருந்து மூலப்பொருட்களான (API – Active Pharmaceutical Ingredients) உற்பத்தியில் சீனாவையே இன்னும் பெருமளவில் சார்ந்துள்ளதாக தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாஜக ஆட்சியில், இந்தியாவின் API இறக்குமதியில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு சீனாவிலிருந்தே வருவதாகவும்,  கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தச் சார்பு 68.1 சதவீதத்திலிருந்து 73.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முக்கியமான தொழில்துறைகளுக்கு இன்னும் சீனாதான் ஆதாரமாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், . ஆத்மநிர்பர் பாரத்’ (தன்னிறைவு இந்தியா) என்ற முழக்கம் வெற்று விளம்பரமே தவிர, அந்த வாக்குறுதியில் எது மீதமுள்ளது என்பதை மோடி அரசு விளக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உண்மையான உள்நாட்டு உற்பத்தித் திறனை உருவாக்க, இந்தியா நீடித்த முதலீடுகளையும் வலுவான உற்பத்தி கட்டமைப்பையும் உருவாக்க வேண்டியது அவசியமாகும் எனவும் ஒன்றிய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version