Close Menu
    What's Hot

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    தவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!

    டீ, வடை கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை – டீக்கடைக்காரர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!
    Featured

    தமிழகம் முழுவதும் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி வேட்டை!. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு!

    Editor web3By Editor web3July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dgp mahesh kumar aggarwal
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மாத கால சிறப்பு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை இன்று (ஜூலை 8) தொடங்கி வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தீவிரமாக நடைபெறவுள்ளது.

    இந்த சிறப்புப் பணியின் முதன்மை நோக்கம், போதைப்பொருட்களை அதிகளவில் கைப்பற்றுவதும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை உடனுக்குடன் கைது செய்வதும் ஆகும். இதற்கான விரிவான செயல் திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன. மண்டல ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்கள், தங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெறும் இந்த நடவடிக்கைகளை அன்றாடம் நேரடியாகக் கண்காணித்து, காவல்துறையினருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையின் செயல்பாடுகள், பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் அளவு மற்றும் கைது நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இந்த ஒழிப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும். மேலும், மாவட்ட மற்றும் மாநகர காவல் அதிகாரிகள் தங்களது வாராந்திர அறிக்கை அறிக்கையை ஒவ்வொரு சனிக்கிழமையும் மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கையையும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி ஒருங்கிணைத்து வழிநடத்துவார்.

    cm vijay DGP Mahesh Kumar Aggarwal drugs drugs across Tamil Nadu tn cm
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதர்மபுரி : தவறான செய்திகளை பரப்பாதீர்கள்..! பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வேண்டுகோள்..!
    Next Article ஆய்வுக்கு போறீங்களா..??அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா..?
    Editor web3
    • Website

    Related Posts

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    July 8, 2026

    தவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!

    July 8, 2026

    டீ, வடை கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை – டீக்கடைக்காரர் போக்சோவில் கைது

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் பதற்றம்; “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது” – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    தவறவிட்ட நகையை ஒப்படைத்த துரை!. வேளச்சேரியில் நடந்த நெகிழ்ச்சி!. பரிசு வழங்கி கவுரவித்த போலீஸ்!

    டீ, வடை கொடுத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை – டீக்கடைக்காரர் போக்சோவில் கைது

    90% நிறைவடைந்த கட்டுமான பணிகள்… மதுரை எய்ம்ஸ் திறப்பு எப்போது?

    ஈரான் ஆட்டம் முடிந்ததா? ஹார்முஸ் ஜலசந்தியில் கை கட்டப்பட்டதா? டிரம்பின் அதிரடி பின்னணி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.