வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள், மேற்கு ஜெயிண்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயிண்டியா மலைகள் ஆகிய பகுதிகள் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாபும்பரே, குருங் குமே, கிழக்கு காமெங், கிழக்கு சியாங், லோஹித் மற்றும் சாங்லாங் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை (ஆரஞ்சு மற்றும் சிவப்பு எச்சரிக்கைகள்) பெய்யக்கூடும். இது அசாமின் அண்டை மாவட்டங்களை பாதிக்கலாம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ (கண்காணிப்பு) விடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அசாமின் சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் மாவட்டங்களை பாதிக்கக்கூடும் என்றும் அது கூறியது.

நேற்று (திங்கள்கிழமை) இரவு வெளியிடப்பட்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (ASDMA) அறிக்கைப்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுடன், இந்த ஆண்டு வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87-ஐ எட்டியுள்ளது.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேல் அசாம் மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் இரவு நேரத்தில் மழை பெய்ததாகத் தகவல்கள் வந்தாலும், வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கிராம மக்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்துள்ளது” என்று ASDMA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொத்தம் ஆறு மாவட்டங்களில் 1,28,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசாகர் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது அதை தொடர்ந்து சாரைடியோ மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்கள் உள்ளன.

ஐந்து மாவட்டங்களில் 55 நிவாரண முகாம்கள் மற்றும் நிவாரண விநியோக மையங்களை நிர்வாகம் நடத்தி வருவதாகவும், தற்போது 11,250 பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ASDMA தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு வெள்ள நிவாரண பணிகளுக்காக, மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவ குழுக்கள் உட்பட பல அமைப்புகள் களமிறக்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version