முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து தஞ்சாவூர் கூட்டத்தில் அநாகரிகமாகப் பேசிய புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் வைத்து கைது செய்த தஞ்சாவூர் போலீசார் அவரைக் காவல் துறை வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், உதயநிதியைக் கண்டித்தும் தவெகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் கைது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் ஆர்.எஸ். பாரதி டி கே எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கைக்கு எதிரான சட்டப் போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version