நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் உபேந்திர திவேதி கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பணிக்காலம் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில், உபேந்திர திரிவேதி பணி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. அப்பொது அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாட்டின் 31-வது ராணுவத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் தீரஜ் சேத் பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 1986-ல் ராணுவதில் சேர்ந்த தீரஜ் சேத், ஜம்மு காஷ்மீரில் கிளர்ச்சி எதிர்ப்பு படை, பாலைவனப் பகுதிகளில் கவசப் படைப்பிரிவு என ஏறக்குறைய 40 ஆண்டுகள் கடுமையான சூழல்களில் பணியாற்றியவர்.
