சென்னையில் நடைபெற்ற நூறுசாமி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில், இயக்குநர் மிஷ்கின் நடிகை சுவாசிகாவின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சசி கடந்த 2016ஆம் ஆண்டில் இயக்கிய பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருந்தார். வித்தியாச கதையம்சம் கொண்ட இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றி அடைந்தது.

தற்போது சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மீண்டும் நடித்துள்ள நூறுசாமி திரைப்படம்  ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சுவாசிகா, கருணாஸ், லிஜிமோல் ஜோஸ், முனீஸ்காந்த், அஜய் தீஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கணவனை இழந்த பெண் மறுமணம் செய்வது தொடர்பான  உணர்வுப்பூர்வமான கதையமைப்புடன் நூறு சாமி படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 

நூறுசாமி படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசுவதற்காக மேடையேறத் தயாரான இயக்குநர் மிஷ்கின், அருகிலிருந்த நடிகர் விஜய் ஆண்டனிக்கு கைகொடுத்ததோடு, யாரும் எதிர்பாராத வகையில் அருகில் நின்ற நடிகை சுவாசிகாவின் காலில் விழுந்து தொட்டு வணங்கினார். இதனால் பதறிப்போன சுவாசிகா, மிஷ்கினை எழுப்பி அவரது கைகளைப் பற்றி நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னார்.  

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version