ஆபாச பேச்சு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளதை கலாய்க்கும் வகையில் தண்ணில கண்டனம் என தவெக ஐடிவிங் பதிவிட்டுள்ளது.
அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என தவெக ஐடி விங் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரிக்க தமிழ்நாடு முழுக்க பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக எனவும், திமுகவின் இன்றைய தியாக முழக்கம், அய்யய்யோ, எம்மா எம்மா! அய்யய்யோ எம்மா எம்மா எனவும் கிண்டல் பதிவிட்டுள்ளது.
மேலும், தண்ணில கண்டம் என உதயநிதியை கலாய்த்து சினிமா போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
