தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அதேப் போல தமிழ் இயக்குநர்களில் மிகவும் தனித்துவமான இயக்குநர் என்றால் அது மிஷ்கின். இவரது படங்கள் அனைத்தும் மக்களின் மனதை வருடம் விதமாக இருக்கும்.

அப்படியான மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது ’டிரெயின்’ திரைப்படம். இந்த படத்தில் நடிகை சுருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நாசர், மற்றும் நடிகர் நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இயக்குநர் மிஷ்கினே இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

ஒரே இரவில் ரயிலில் நடைபெறும் மர்ம சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டார்க் திரில்லர் படமாகும். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், டீசரை படக்குழு சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், மிஷ்கினின் திறமையையும், அவரது நேர்மையான பேச்சையும் மேடையிலேயே மனதாரப் பாராட்டினார். இயக்குநர் மிஷ்கினை, டி. ராஜேந்தருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் தன்னிச்சையாகவும், எதற்கும் அஞ்சாமலும் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பேசும் ஒரு ‘தனித்துவமான பேச்சாளர்’ என்று இயக்குநர் அமீர் பாராட்டியுள்ளார்.

விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “ நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன்.

இந்​தக் கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது” என்​றார்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version