Close Menu
    What's Hot

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக மறுசீரமைப்பு..!! 20 மா.செ-க்கள் மீது பாயும் ஆக்ஷன்..!! ஸ்டாலின் போடும் புது கணக்கு..!!
    Featured

    திமுக மறுசீரமைப்பு..!! 20 மா.செ-க்கள் மீது பாயும் ஆக்ஷன்..!! ஸ்டாலின் போடும் புது கணக்கு..!!

    editor5By editor5July 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 26 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) மாவட்ட அமைப்புகளில் பெரிய அளவிலான மறுசீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, 20 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கும் முடிவுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்புகளை வழங்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    லண்டன் பயணத்துக்கு முன்பே, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 11 பேர் கொண்ட சிறப்புக் குழுவை ஸ்டாலின் அமைத்தார். மாவட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து, மறுசீரமைப்புக்கு பரிந்துரைகளை வழங்க இந்தக் குழு பணியாற்றி வந்தது. லண்டனில் இருந்து திரும்பிய பிறகு, ஸ்டாலின் தங்கம் தென்னரசுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த ஸ்டாலின் தீவிரமாக உள்ளார். தற்போது சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பதிலாக புதிய நியமனங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டச் செயலாளர் பதவிகளில் குடும்பத்தினரை நியமிக்கக் கூடாது என்பதிலும் தலைமை உறுதியாக உள்ளது. இந்த முடிவு, கழகத்தின் இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை உயர்வு கள அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என திமுக தலைமை நம்புகிறது. சில மூத்த தலைவர்கள் இந்த அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஸ்டாலின் இதில் உறுதியுடன் இருக்கிறார். சீனியர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, புதிய முகங்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் கழகத்தை வலுப்படுத்தும் நோக்கம் இதன் பின்னணியில் உள்ளது.

    20 மாவட்டச் செயலாளர்களை ஒரே நேரத்தில் நீக்கினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு மாநில செயற்குழு, பொதுக்குழு உள்ளிட்ட பதவிகளோ அல்லது பிற முக்கிய பொறுப்புகளோ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுகவின் அடுத்தகட்ட வியூகங்களுக்கு வலு சேர்க்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

    DMK MK Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்துக்குப் பலன்… பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்
    Next Article நீட் பேப்பர் லீக்.. சவாலாக ஏற்றுக்கொண்டு மாணவர்கள் வெற்றி..!! சமாளித்த நிர்மலா சீதாராமன்..!!
    editor5

    Related Posts

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    July 26, 2026

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    July 26, 2026

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவண்ணாமலை: இடுக்கு பிள்ளையார் கோயில் இடுக்கில் சிக்கி ஆந்திர பக்தர் மூச்சுத்திணறி மரணம்!

    மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்- கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பு வலியுறுத்தல்!

    “உதயநிதி சுய பரிசோதனை செய்ய வேண்டும்!”– அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்

    காவல் நிலைய மரணத்துக்கு முதல்வரிடம் நீதி: அனிதா ராதாகிருஷ்ணனிடம் குடும்பத்தினர் வலியுறுத்தல்!

    சிவகாசி: சட்டவிரோத பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு: 11 பேர் கைது!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.