Close Menu
    What's Hot

    கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜரானார் செந்தில் பாலாஜி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மேகதாது விவகாரமானதற்கு திமுக ஆட்சியில், நேர்ந்த சட்டக்குளறுபடிகளே காரணம் – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்
    Featured

    மேகதாது விவகாரமானதற்கு திமுக ஆட்சியில், நேர்ந்த சட்டக்குளறுபடிகளே காரணம் – ஆதவ் அர்ஜுனா விமர்சனம்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 26, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 aadhav
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியில் நேர்ந்த சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

    காவிரி நீர் உரிமையும்… தமிழகத்தின் வாழ்வுரிமையும் என்னும் தலைப்பிட்டு ஆதவ் அர்ஜுனா எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

    முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி நதிநீர் மற்றும் மேகதாது அணை குறித்த பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது உண்மைக்கு முரணானதாகும்.

    காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், மாநிலத்தின் குடிநீர் பாதுகாப்பு மற்றும் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர் மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 27.05.2026 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து, காவிரி நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமைகள், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டம் மற்றும் அதனால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாள் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, 19.06.2026 அன்று பிரதமருக்கு  முதலமைச்சர் அனுப்பிய கடிதத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜையை நடத்தவுள்ளதாக அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று வழங்கிய தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் 16.02.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பிற்கும் முற்றிலும் முரணானது என்பதை சுட்டிக்காட்டினார்.

    மேலும், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் இத்திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்திற்கு இதுகுறித்து உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

    அதே 19.06.2026 அன்று, தமிழ்நாடு உள்ளிட்ட இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் மேகதாது அல்லது காவிரி ஆற்றுப்படுகையில் வேறு எந்த இடத்திலும் புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, அதனை பிரதமருக்கும் அனுப்பி வைத்து, தமிழ்நாடு சட்டமன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் சட்டப்பூர்வ நீர் உரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் நடைபெற்ற தி.மு.க ஆட்சியில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் 13.11.2025 அன்று தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, அன்றைய தி.மு.க அரசு, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவும் 15.04.2026 அன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, மறுசீராய்வு மனுவை அன்றைய தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. தமிழக உரிமைக் காக்கும் கடைசி வாய்ப்பாக இருந்த அந்த மனு மீதும் கவனமாக, உரிய வாதங்களை வலுவாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தி.மு.க அரசு எடுத்து வைக்கவில்லை. அதையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மறு சீராய்வு மனுவையும் 25.04.2026 அன்று தள்ளுபடி செய்தது.

    கடந்த ஆட்சியில் நடைபெற்ற இதுபோன்ற சட்டக் குளறுபடிகளால்தான், தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நநி நீர் பிரச்சினையும், மேகதாது அணை விவகாரமும் இன்றைக்கு மிகப்பெரிய சோதனையாக உருவெடுத்துள்ளது.

    இதுபோன்ற கடந்தகால குளறுபடிகளைப் பேசுவதன் மூலம், காவிரி நதி நீர் விவகாரத்தில், மேகதாது அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக் குரலை திசைதிருப்ப நாங்கள் விரும்பவில்லை. அப்படிப்பட்ட குறுகிய அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது.

    அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல… வேறு யாரிடம் இருந்தும்… ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால், அவற்றை கருத்தில் கொள்வதற்கும், கவனப்படுத்துவதற்கும், ஏற்றுக் கொள்வதற்கும் நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.

    காவிரி நீர் உரிமை என்பது அரசியல் சார்ந்த பிரச்சனை அல்ல; அது தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, டெல்டா விவசாயிகளின் எதிர்காலம் மற்றும் மாநிலத்தின் நீராதார பாதுகாப்புடன் தொடர்புடைய அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். அதில், எந்தவித குறுகிய அரசியல் நோக்கத்தோடும், அரசியல் ஆதாயத்தின் கணக்குகளோடும், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செயல்படவில்லை.

    மாறாக, காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் முழுமையாக அமல்படுத்தப்படும் வரையிலும், தமிழ்நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்படும் வரையிலும், சட்டப்பூர்வமான மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வழிமுறைகளிலும் தொடர்ந்து முன்னெடுக்கும். காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும்! தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கும்!

    Aadhav Arjuna Cauvery Water Dispute DMK government Mekedatu Dam Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் பார் விதிகளில் அதிரடி மாற்றம்: புதிய அரசாணை வெளியீடு!
    Next Article கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு: 8 அலுவலர்கள் சஸ்பெண்ட்!
    Editor TN Talks

    Related Posts

    கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!

    July 26, 2026

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    July 26, 2026

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜரானார் செந்தில் பாலாஜி!

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கார்கில் வெற்றி தினம்: உயிர் நீத்த வீரர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி!

    புதுச்சேரி;   கார்கில் வெற்றி தினம்… போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

    திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 2-வது நாளாக ஆஜரானார் செந்தில் பாலாஜி!

    தென் மண்டல கவுன்சில்: முதல்வர் விஜய் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் அறிவிப்பு

    நீட் தேர்வு குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை… அமைச்சர் CTR நிர்மல்குமார் ஆவேசம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.