Close Menu
    What's Hot

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக எம்.எல்.ஏ கைது விவகாரம்..!! இது உச்சகட்ட அடக்குமுறை..!! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்..!!
    Featured

    திமுக எம்.எல்.ஏ கைது விவகாரம்..!! இது உச்சகட்ட அடக்குமுறை..!! கொந்தளித்த உதயநிதி ஸ்டாலின்..!!

    editor5By editor5July 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 42 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று காலை கைது செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுகவினர் உடனடியாகக் களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தக் கைதை “உச்சகட்ட அடக்குமுறை” என வன்மையாகக் கண்டித்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதாகத் தவெகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிகாலையிலேயே அவரது இல்லத்துக்கு சென்று கைது செய்தனர். கைதுக்குப் பிறகு அவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். கோவில்பட்டியிலும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “தமிழக அரசுக்கு எதிராக” கோஷங்கள் எழுப்பிய அவர்கள், எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தினர். போராட்டத்தின் போது போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் தலையிட்டு 60க்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக வைத்துள்ளனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இந்த நடவடிக்கையை கடுமையாகச் சாடினார். “ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக மக்கள் பிரதிநிதியை மதிக்காமல் காலை 6 மணிக்கு வீட்டுக்கு போலீசை அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் எஸ்.பி. அலுவலகத்தில் அடைத்து வைப்பது உச்சகட்ட அடக்குமுறை” என அவர் குறிப்பிட்டார்.

    மேலும், அதே மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணால் குற்றம்சாட்டப்பட்ட தவெக எம்.எல்.ஏ. மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதையும் உதயநிதி சுட்டிக்காட்டினார். “எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. ஆளும் அரசின் சரி, தவறுகளைச் சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயகக் கடமை” என்று வலியுறுத்தினார்.

    “பேசினாலே கைது என்ற அராஜகத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆணவத்தில் எத்தனை கைதுகள் செய்தாலும் கழக உடன்பிறப்புகள் அஞ்ச மாட்டோம். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவைச் சந்திப்பது உறுதி” என உதயநிதி ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சம்பவம் தமிழக அரசியலில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. எதிர்க்கட்சியினரின் குரலை நசுக்கும் முயற்சியா அல்லது சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதம் எழுந்துள்ளது.

    dmk mla markandeyan Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராமர் கோவில் நன்கொடை திருட்டு: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!
    Next Article சேத்துப்பட்டு இயற்கை எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
    editor5

    Related Posts

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    July 21, 2026

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    July 21, 2026

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான பேரணியில் தடியடி: 178 பேர் காயம், 70 பேர் கைது!

    கனடா பொருட்களுக்கு 50% கூடுதல் வரி: அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

    விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: நீதிமன்றம் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.