தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வர இருக்கும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகளை இப்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் சட்டமன்றத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் அறிவுறுத்தியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானோர் சீனியர்களாக இருப்பதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை முறையாக வழிநடத்த உதவுவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டம் சுமார் 15 நிமிடங்களில் முடிவு பெற்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version