Close Menu
    What's Hot

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!
    Featured

    இன்று ரமேஷுக்கு தர்ம அடி; நாளை தவெக நிர்வாகிகளுக்கு – தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் – திமுக கடும் தாக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 karur tvk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக நிர்வாகிகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி இது தமிழக வெற்றிக் கழகமல்ல, பாலியல் வெறிக் கழகம் என திமுக ஐ.டி.விங் கடுமையாகத் தாக்கி உள்ளது.

    இது தொடர்பாக திமுக ஐ.டி.விங் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது;-

    பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை, தமிழ்நாடு முழுவதும் தவெக நிர்வாகிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அநாகரிகச் செயல்களில் ஈடுபடும் கிரிமினல்கள், தவெக கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது உங்கள் கட்சியின் யோக்கியதையை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது.

    பெண்ணை உருட்டுக் கட்டையால் தாக்கியவருக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கியது முதல், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிரான புகார்கள் வரை, பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து நீங்கள் காட்டிவரும் அலட்சியம் உங்கள் போலித்தனத்தின் உச்சம்.

    கரூரில் திருமணமான பெண்ணிடம் அத்துமீற முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் ரமேஷுக்குக் கிடைத்த ‘தர்ம அடி’, பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் ஒரு சிறு வெளிப்பாடுதான்; இது வெறும் தொடக்கம் மட்டுமே.

    சட்டம் ஒழுங்கைத் தன் கையில் வைத்திருக்கும் முதலமைச்சராக, உங்கள் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்கள் பெண்களைச் சீண்டும்போது மவுனம் காப்பது, இந்தத் தவறுகளை நீங்களே மறைமுகமாக ஊக்குவிப்பதைக் காட்டுகிறது.

    மிஸ்டர் விஜய், இனிமேல் இந்த அராஜகங்களை எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்! பெண்களைப் பாதுகாப்பதில் திராணியற்று, குற்றவாளிகளை அரவணைக்கும் உங்கள் இந்த ‘பாலியல் வெற்றிக் கழக’த்தின் அட்டகாசம் தொடர்ந்தால்,

    இன்று கரூரில் ரமேஷுக்குக் கிடைத்த அடி, நாளை தமிழகம் முழுவதும் உள்ள உங்கள் தவெக-வினருக்குத் தேடி வரும்.

    மக்கள் வீதிக்கு இறங்கிப் பாடம் புகட்டத் தொடங்கிவிட்டார்கள்; உங்கள் கட்சிப் பொறுப்பாளர்களின் கிரிமினல் செயல்களை நிறுத்தத் திராணியில்லை என்றால், மக்களின் கோபத்திற்கு நீங்களே பலியாவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண், பணி முடிந்து தோழியுடன் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, குளித்தலை கிழக்கு ஒன்றிய த.வெ.க., செயலர் ரமேஷ், பைக்கில் பின்தொடர்ந்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
    இதில் நிலை தடுமாறி, பெண்கள் இருவரும் விழுந்தனர். அருகில் இருந்த பொதுமக்கள், ரமேஷுக்குத் தர்ம அடி கொடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

     

    DMK criticism MK political controversy ramesh Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நலம் TN’ சேவை, மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம், புதிய திட்டங்கள் தொடக்கம்!
    Next Article பிறந்து ஒரு மணிநேரமே ஆன ஆண் குழந்தை!. புதரில் வீசி சென்ற அவலம்!. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
    Editor TN Talks

    Related Posts

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    July 14, 2026

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    July 14, 2026

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமித்ஷா கட்டுப்பாட்டில் தமிழ்நாடு கவர்னர் – காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.