Close Menu
    What's Hot

    தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை

    போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்
    Featured

    போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    017 sarathkumar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதுபோல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;-

    இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

    அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணி சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

     

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட – ஒன்றிய – நகர – பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    DMK Student Wing Drug Use protest Sarathkumar
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்
    Next Article தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை
    Editor TN Talks

    Related Posts

    தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை

    June 28, 2026

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    June 28, 2026

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தனது வீட்டில் தூங்கிய சிறுமி பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்பு – என்ன நடந்தது? போலீசார் விசாரணை

    போதைப் பொருள் பயன்பாடு? – அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக திமுக மாணவர் அணி போராட்டம்

    முதலமைச்சர் குதிரைப்பேரம்; வைகோ அம்பலம் – இன்பதுரை பகீர்

    விநாயகர் சதுர்த்திக்காக மண் விநாயகர் சிலைகளையே வாங்குங்கள் : ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்

    செஷெல்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட பேச்சுவார்த்தை; இருதரப்பு உறவை வலுப்படுத்த நடவடிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.