பாமகவின் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு திமுக ஆதரவு கொடுத்திருப்பதை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து அனைத்துக் கட்சிகள் & சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கத்தில் பாமக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர் .

குழுவாக இணைந்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் எனக் கூறினார்.

இந்தியாவில் கர்நாடகா,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கணக்கெடுப்பு முடிந்து விட்டதாக தெரிவித்த அன்புமணி,

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், காலையில் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு நீங்கள் எடுத்திருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு கருத்துக்களை  நாங்கள் ஆதரிக்கிறோம் எனவும்,

நாங்கள் இந்த கூட்டத்திற்கு ஆதரவு தருகிறோம்,எங்கள் கட்சியின் நிலைப்பாடும் அதுதான் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 99.9 சதவீத கட்சிகள், அமைப்புகள் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வேற்றுமையை அகற்ற வேண்டும் என்றால் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார்.

கடந்த திமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க  முடியாததற்கு பல காரணங்கள் இருந்ததாகவும், அதுகுறித்து இப்போது பேச விரும்பவில்லை எனவும் கூறிய அன்புமணி,

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் அமல் படுத்த முடியும், இதற்கான நிதி உள்ளது, அதிகாரிகள் உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அனைத்து அமைப்புகளும் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை விரும்புகிறார்கள், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தற்போதைய தமிழக முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version