திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை விருதுநகரில் தென் மண்டல திமுக இளைஞரணி மாநாடு சந்திப்பு நடைபெற உள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை விருதுநகரில் திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி 28 திமுக மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் தென் மண்டலத்தை சார்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி பேரூராட்சி வட்டக்கலை மற்றும் வாக்குச்சாண்டி அலுவலக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த மாநாடு, தேர்தலுக்கான இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யவும், பூத் கமிட்டி பணிகளை வலுப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனை என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version