இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திருச்சி காஜா மியான் பள்ளியில் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, கடந்த ஐந்தாண்டு காலமாக முத்துவேல் கருணாநிதி ஆட்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்திய மாநிலங்களுக்கெல்லாம் முன் உதாரணமான ஆட்சியாக பாராட்டைப் பெற்றுள்ளது.

கடல் கடந்தும் தமிழகத்தின் ஆட்சியும், சாதனையும் அவர்கள் எல்லா தரப்பு மக்களுக்கும் செய்திருக்கிற சாதனைகள் அத்தனையும் பேசும் பொருளாகி உள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் கனடா, ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலாக பேசப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகிறது.

234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிவாகை சூடும் நிலையில் இருக்கிறது.

நான்கு முனை, ஐந்து முனைப் போட்டி என்பதெல்லாம் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சிதான் முதல் முனை.

எல்லா மக்களும் ஏற்றுக் கொண்டுள்ள திராவிட மாடல் ஆட்சி தான் மீண்டும் வரவேண்டும்.

ஸ்டாலின் தொடர வேண்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கம் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version